Categories: சினிமா

மரோசரித்ரா தமிழ் வெர்ஷனில் மோகனை நடிக்கவைக்க விரும்பிய பாலச்சந்தர்.. ஆனால் அவர் செய்த செயலால் நடந்த டிவிஸ்ட்!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.

தமிழில் இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்.தான் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் அவரைக் கதாநாயகனாக்கினார். ஆனால் அதற்கு முன்பே கோகிலா திரைப்படத்தைப் பார்த்த பாலச்சந்தர் தன்னுடைய படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய மரோசரித்ரா திரைப்படம் தெலுங்கிலேயே 700 நாட்களைத் தாண்டி ஓடியது. கமல்ஹாசன், சரிதாவினை தென்னிந்திய மொழிகளில் பிரபலப்படுத்திய படம். இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை தமிழில் எடுக்க இயக்குநர் கே.பாலச்சந்தர் திட்டமிட்ட போது அதில் கமல் வேடத்தில் மோகனை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்காக அவரிடம் பேசி முன்பணமும் கொடுத்துள்ளார். ஆனால் மரோசரித்ரா தொடங்குவதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

அப்போது மோகன் தெலுங்கில் தூர்ப்பு வெள்ளே ரயில் என்ற படத்தில்  நடித்துக் கொண்டிருந்தார். இது பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்  இந்த படத்தில் ஒரு காட்சியில் மோகன் மொட்டையடித்து, மீசை எடுத்து கழுதைமேல் ஏறி வருவார். அதற்காக உண்மையிலேயே மொட்டையடித்துள்ளார்.

அப்போது பார்த்து பாலச்சந்தர் அழைக்க, மொட்டைத் தலையோடு போய் நின்றுள்ளார் மோகன். அதைப் பார்த்து கடுப்பான ‘என்னைக் கேட்காமல் நீ எப்படி மொட்டை அடிக்கலாம்’ எனத் திட்டி அனுப்பிவிட்டாராம். அதன் பின்னர் மரோசரித்ராவை ரீமேக் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டு அதை அப்படியே தமிழ்நாட்டிலும் ரிலீஸ் செய்ய இங்கும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

 

vinoth

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

9 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

14 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

24 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

37 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

45 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

48 minutes ago