2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, சுமார் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 3 கோடி மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காகப் முந்தைய ஆட்சியில் கோரியிருந்த டெண்டரை, தற்போது அமைந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கடந்த அரசின் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்து ரத்து அல்லது மாற்றம் செய்து வரும் தவெக அரசு, மின்சாரத் துறையின் இந்த மெகா திட்டத்திலும் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த பழைய டெண்டர் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றுத் திட்டமாக, முதற்கட்டமாக சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள சுமார் 50 லட்சம் வணிக நுகர்வோர்களுக்கும் பயன்படும் வகையில், மொத்தம் 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை மட்டும் முதற்கட்டமாகப் பொருத்துவதற்கு புதிய டெண்டர் கோர தவெக அரசு முடிவு செய்துள்ளது. முழு மாநிலத்திற்கும் ஒரே நேரத்தில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அதிக மின் நுகர்வு கொண்ட நகர்ப்புற மற்றும் வணிகப் பகுதிகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையில்லாத அரசு நிதி விரையத்தைக் கட்டுப்படுத்தி, திட்டத்தை மிகவும் திறம்படச் செயல்படுத்த முடியும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…