Categories: CINEMA

தசாவதாரம் கமலுக்கு முன்னாடியே 11 கேரக்டரில் நடித்தவர் இவரா? – ஒரு காலத்துல தமிழ் சினிமாவையே கலக்கிய வில்லன் நடிகராச்சே

எம்ஜிஆர் படங்களை பற்றி பேசும்போது இந்த நடிகரை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவர்தான் வில்லன் நடிகர் எம்என் நம்பியார். எம்ஜிஆருடன் சரிக்கு சரியாக நின்று வாள் சண்டை போடுவார். எம்ஜிஆரை வஞ்சம் தீர்க்க சதி வலைகளை பின்னுவார். எம்ஜிஆருக்கு எப்போதும் தொல்லை கொடுக்கும் நம்பியாரை, மிக அலட்சியமாக, ஜாலியாக சிரித்தபடியே தோற்கடித்து விடுவார் எம்ஜிஆர்.

மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா, என நம்பியார் கோபமாக கேட்க, சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என சிரித்தபடியே பதிலளிப்பார் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர். எங்கவீட்டு பிள்ளை படத்தில், நம்பியாரை சவுக்கால் எம்ஜிஆர் அடிக்கும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறந்தது. அப்படிப்பட்ட நம்பியார், முதலில் நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்குள் வந்தார். நீலகிரிதான் அவரது சொந்த ஊர். ஊட்டியில் அவரது தந்தை சர்வேயராக இருந்திருக்கிறார்.

பத்மநாபதாஸ் என்ற படத்தில் மாதண்ணா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் வந்த நம்பியார் பின்னர் வித்யாபதி, கஞ்சன், கல்யாணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கல்யாணி படத்தில் நம்பியார்தான் கதாநாயகன். பின், மந்திரிகுமாரி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து சிதம்பரசாமியார் என்ற படத்தில், எம்என் நம்பியார் 11 வேடங்களில் நடித்திருக்கிறார். அதாவது அந்த காலத்திலேயே 11 வேடங்களில் ஒரு நடிகர் நடிப்பது பெரிய விஷயம். கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தவர் என்ற நிலையில், அதற்கு முன்பே 11 வேடங்களில் நடித்த பெருமை எம்.என் நம்பியாருக்கு உண்டு. சபரிமலை ஐயப்ப பக்தரான நம்பியார், குருசாமி என்றுதான் தமிழ் சினிமாவில் அழைக்கப்பட்டார். எஜமான், வின்னர் உள்ளிட்ட படங்களில் கூட அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

Sumathi
Sumathi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago