திடீர் திருப்பம்…. காங்கிரஸ் இல்லாத 3வது அணி?…. ஸ்டாலின் போட்ட ரகசிய ஸ்கெட்ச்…. கலக்கத்தில் ராகுல் காந்தி….!

Spread the love

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்கும் நோக்கம், மாநிலக் கட்சிகளிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, சிறந்த முதல்வர்களாக மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளது தேசிய அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், காங்கிரஸ் மீதான அதிருப்தியில் இருக்கும் இக்கட்சிகளுக்கு தீப்கேவின் கருத்து புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

தென்னிந்திய அரசியலில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸின் சில செயல்பாடுகள் மாநிலக் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜகவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் பேசியது சித்தாந்த ரீதியாக பெரும் சலசலப்பை உருவாக்கியது. அதேபோல் தமிழ்நாட்டில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் போன்ற தோழமைக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை நாகரிகமாகத் தெரிவித்து நகர்ந்த நிலையில், காங்கிரஸ் எவ்வித முறைசார் பேச்சுவார்த்தையுமின்றி தவெக ஆதரவு நிலைக்குச் சென்றது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை விதைத்துள்ளது.

வட இந்தியாவை எடுத்துக்கொண்டால், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பலவீனப்படுத்தியதில் காங்கிரஸின் பங்களிப்பு அதிகம் என்ற விமர்சனம் உள்ளது. மதுபானக் கொள்கை விவகாரத்தில் புகார்களை முன்வைத்து ஆம் ஆத்மிக்கு எதிராகப் தீவிரமாக களமிறங்கிய காங்கிரஸ், இறுதியில் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பாஜகவிடம் பறிகொடுத்தது. ராகுல் காந்தியின் இத்தகைய அணுகுமுறையால் ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தீராத அரசியல் பகை உருவாகியுள்ளது.

தேசிய அளவில் பாஜகவைக் வீழ்த்தவே திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துள்ளன. இருப்பினும், உள்நாட்டு அரசியல் மோதல்களாலும் காங்கிரஸின் நகர்வுகளாலும் இந்த சகிப்புத்தன்மை நீண்ட காலம் நீடிக்காது என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது. தற்போது அபிஜித் தீப்கேவின் கருத்துக்கள் மூலம், காங்கிரஸை விடுத்து மாநிலக் கட்சிகள் ஒன்றிணையும் 3-வது அணிக்கான சாத்தியக் கூறுகள் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.

Nanthini

Recent Posts

6 மாத ஒர்க் ரிப்போர்ட் கேட்ட CM விஜய்.. ரூம் போட்டு விசாரித்த மாமல்லபுரம் ரகசியம்… டேபிளுக்கு போகும் அந்த ஒரு ரிப்போர்ட்….!

மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச்…

37 seconds ago

#BREAKING: “நேரடியாக என்னைச் சந்தியுங்கள்”…. தவெக MLA-க்களுக்கு CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் அசைன்மென்ட்…!

சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.…

3 minutes ago

கடைசியாக அழைத்து 15 நிமிடம் வார்னிங்…. சர்ச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்….!

சமீபத்திய ஊடகத் தகவல்களின்படி, சர்ச்சைகளில் சிக்கியுள்ள தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும் துறையூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். ரவிசங்கர் மற்றும்…

6 minutes ago

ஐயோ மனிதநேயமா இது?… தண்ணியில இறங்க மாட்டேன்… தோள்ல ஏத்திக்கோ… தலித் நபரின் தோளில் சவாரி செய்த MLA… நடு ஆற்றில் விழுந்த அதிர்ச்சி வீடியோ… இணையத்தில் வைரல்…!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் தொடர்பான வீடியோ…

11 minutes ago