தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருவது, விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்ததும், அதனை சசிகலா ஆதரவு ஊடகமான ‘ஜெயா பிளஸ்’ தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியதும் தான். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா மற்றும் தினகரன் தரப்பு செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த ஜெயா பிளஸ், முதன்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வை லைவ் செய்தது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால், அந்த தொலைக்காட்சியின் நிர்வாக மாற்றமும், கமர்சியல் ரீதியான புதிய வியூகங்களுமே காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பனையூர் பாபு, சமீபகாலமாக கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தார். தொடர்ந்து திமுக தலைமைக்கு நெருக்கமாக செயல்பட்டு வந்ததால், 2026 தேர்தலில் அவருக்கும், ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி போன்றோருக்கும் விசிகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே விசிக தனது பட்டியலை வெளியிட்டதால், இவர்கள் திமுகவில் இணைந்து போட்டியிடும் திட்டமும் முறியடிக்கப்பட்டது. திருமாவளவன் திட்டமிட்டே தங்களைப் புறக்கணித்ததாக ஆத்திரமடைந்த பனையூர் பாபு, இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.
இந்த இணைப்பு விழாவை ஜெயா பிளஸ் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது தான் தற்போதைய பெரும் விவாதப் பொருள். கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் செய்திகளையும், பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது செய்திகளையும் மட்டுமே ஒளிபரப்பிய இந்த சேனல், இபிஎஸ்-சசிகலா மோதலுக்குப் பிறகு முற்றிலும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டைக் கையில் எடுத்தது. திமுக அல்லது மற்ற எதிர்க்கட்சிகளின் முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொலைக்காட்சி இதுவரை நேரடியாக ஒளிபரப்பியதே இல்லை என்ற வரலாற்றை உடைத்து, இன்று ஸ்டாலினின் நிகழ்ச்சியை லைவ் செய்து அதிரடி காட்டியுள்ளது.
இதன் பின்னணியை விசாரித்த போது, ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் நிர்வாகத்தில் பெரிய மாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை சேனலை வழிநடத்தி வந்த சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, திவாகரனுக்கு நெருக்கமான ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் சேனல் சென்றுள்ளது. வெறும் கட்சி அடையாளத்தோடு மட்டும் இயங்காமல், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிகழ்வுகளையும் ஒளிபரப்பினால் கூடுதல் பார்வையாளர்களைப் பெறலாம் என்றும், ‘கமர்சியல் ரூட்டுக்கு’ மாறுவதே சேனலின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் புதிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் படியே, பனையூர் பாபுவின் திமுக இணைப்பு விழா நேரலை என்று சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…