“எடப்பாடி முடிந்தது”…. மிதுன் கைக்கு மாறிய அதிமுக?…. ஆதவ் அர்ஜுனா வைத்த அணுகுண்டு….. ஒட்டுமொத்தமாக மாறும் கொங்கு மண்டல தேர்தல் கணக்கு….!

Spread the love

தமிழக அரசியலில் தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. வழக்கமாக திமுகவை மட்டுமே இலக்கு வைத்து விமர்சித்து வந்த அவர், இந்த முறை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், திமுகவின் முதன்மை தலைவர்களையும் ஒரே நேரத்தில் கடுமையாகச் சாடியுள்ளது கொங்கு மண்டல அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுக்காமல் வெறும் அவதூறுகளையும், பெண்களை மையப்படுத்திய ஆபாசப் பிரச்சாரங்களையுமே அக்கட்சி நம்பியிருப்பதாகக் குற்றம்சாட்டினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே திமுக இதே பாணியைத்தான் பின்பற்றியதாகவும், ஆனால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும்,உதயநிதி ஸ்டாலின் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பெண்களையும் இலக்கு வைத்து மட்டுமே பேசி வருவதாகவும், கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சொல்லி ஓட்டு கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்றும் சாடினார்.

அதேவேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசும்போது திமுகவின் குரலிலேயே பேசி வருவதாக ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்தார். 2016-இல் 41 சதவீத வாக்கு வங்கியுடன் இருந்த அதிமுக, இன்று 10 சதவீதமாகச் சுருங்கிவிட்டதாகக் சுட்டிக்காட்டிய அவர், ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் விலகியதே இதற்கு முக்கியக் காரணம் என்றார். கொங்கு மண்டலத்தில் அதிமுக பெற்ற வெற்றிகளுக்கு பாமக கூட்டணி மட்டுமே காரணம் என்றும், பாமக இல்லையெனில் எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

அதிமுகவின் தற்போதைய பலவீனத்திற்கு எடப்பாடி பழனிசாமியின் குடும்ப அரசியலே முதன்மை காரணம் என்று குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியை மறைமுகமாக வழிநடத்துவது அவரது மகன் மிதுன் தான் என்றார். வேட்பாளர் தேர்வு முதல் பிரச்சாரத் திட்டமிடல் வரை அனைத்தும் மிதுனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குவதாகவும், இதனால் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் பலர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் விமர்சித்தார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பாடுபட்டுச் சேர்த்த கோடிக்கணக்கான மதிப்பிலான அதிமுக டிரஸ்ட் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனது மகனை முன்னிறுத்துவதாகச் சாடினார்.

அதிமுகவைக் கட்டியெழுப்ப உழைத்த வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தவுடன் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக அவர் கூறினார். சசிகலாவை வெளியேற்றி எடப்பாடியைப் பொதுச்செயலாளராக்க பாடுபட்டவர்களுக்கே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே தென் மாவட்டங்களில் அதிமுக தனது செல்வாக்கை ஒட்டுமொத்தமாக இழந்து நிற்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களின் தவறான பிரச்சாரப் பாணியாலும், சுயநல அரசியலாலும் மக்களிடமிருந்து விலகிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, எதிர்வரும் தேர்தலில் கொங்கு மண்டல மக்களும், குறிப்பாகத் தாய்மார்களும் இத்தகைய கீழ்த்தரமான அரசியலைத் தூக்கியெறிவார்கள் என்று உறுதியாகத் தெரிவித்தார். தாராபுரம் இடைத்தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக ஆகிய இரு தரப்பிற்கும் தக்க பாடம் புகட்டும் என்றும் தனது பேச்சின் முடிவில் அவர் சவால் விடுத்தார்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி…. தீபாவளி பரிசு…. அனைவருக்கும் வங்கி கணக்கில் பணம்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் விஜய்….!

2025-26ஆம் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ.603.34…

5 minutes ago

“மளிகைக் கடையில் திடீர் தீ விபத்து….” தாயும், 5 வயது மகளும் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் கணவர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில், அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் இயங்கி வந்த மளிகைக் கடையில் வியாழக்கிழமை காலை…

7 minutes ago

ஷாக் ஆயிடுவீங்க!… சைக்கோ தாயா?… குழந்தைகளை தாக்கிய பெண்… தங்கை காப்பாத்த முயன்ற அண்ணன்… நெஞ்சை பதறவைக்கும் உண்மை சம்பவம்…!!

தென் கரோலினாவின் ஸ்பார்டன்பர்க் நகரில் தாயொருவரால் தன் பிஞ்சுக் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஒட்டுமொத்த மனித மனசாட்சியையும்…

8 minutes ago

“அதிவேகமாக வந்து பம்பை இடித்த கார்…” பெண் தோழியுடன் அலறியடித்து ஓடிய நபர்… பெட்ரோல் பங்க் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சாம்பல்…! வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் அமைந்துள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் பயங்கர…

16 minutes ago

ஐயோ பாவம்..! ஒரே ஒரு நொடி அலட்சியம்… தேசிய நெடுஞ்சாலையில் துடிதுடித்துப் போன வாயில்லா ஜீவன்கள்… கதறும் உரிமையாளர்…!!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியா பகுதியில், கன்ட்லா - மோர்பி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆட்டு…

19 minutes ago

நிற்காமல் சீறிப்பாய்ந்த மரண லாரி… அடுத்தடுத்து மோதி சிதறிய வாகனங்கள்… பறிபோன 2 ராணுவ வீரர்களின் உயிர்… நடுநடுங்க வைக்கும் கோர விபத்து…!!

தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா - தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி…

25 minutes ago