திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ் கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
கடந்த 8-ஆம் தேதி கீழ்பாக்கம் கிராமத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் சிறுமியின் சடலம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
கீழ்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருளுக்கும்(21) சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5-ஆம் தேதி அருள் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்துள்ளார். அதன் பிறகு தான் சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையே என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ சட்டத்தின் கீழ் அருளும் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…