#image_title
சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் செந்தில் மற்றும் ஸ்ரீஜா அவர்கள் தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டடியுள்ளனர்.ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். அதன் பிறகு அவருக்கு பிரபல தொலைக்கட்சியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அவர் மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதற்கிடையில் அவர் விளம்பரங்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் ஜீ தமிழில் சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் சரவணன் மீனாட்சி சீரியலில் முதன்மை நாயகியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு தனக்கு மகன் பிறந்த உள்ள செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். தற்போது அவர்கள் மகனின் முதல் பிறந்தநாளை நண்பர்கள், உறவினர்கள் என பலரை அழைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது மகனின் பிறந்த நாளன்று ஒரு கேட் டு கேதர் ஏற்ப்பாடு செய்திருந்ததாகவும் அது சிறப்பாக நடைபெற்றதாகவும் கூரிப்பிட்டுள்ளார்.இதில் கலந்துகொண்டவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இதனை தொடர்ந்து அவரது மகனுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…