“ஆமாம்.. இது சிறுபான்மை அரசு தான்”… ஒப்புக்கொண்ட முதலமைச்சர் விஜய்… சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட தளபதி – இளையதலைவர்..!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கெடுப்பிற்கு முன்னதாக நடைபெற்ற விவாதத்தில், திமுக சட்டமன்ற குழுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாகச் சாடினார். “தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை; 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது” என்று குறிப்பிட்ட அவர், எம்எல்ஏக்களைக் கடன் வாங்கி இந்த அரசு இயங்குவதாகவும், இது ஒரு பலவீனமான சிறுபான்மை அரசு என்றும் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

உதயநிதியின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது என்ற நிலையில், தேவையான எண்ணிக்கையை விட அதிக ஆதரவைப் பெற்று முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதனைத் தொடர்ந்து, முறைப்படி முதலமைச்சராக விஜய்யை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த வெற்றி தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், உதயநிதியின் விமர்சனங்களுக்குச் சுடச்சுட பதிலடி கொடுத்தார். “நடந்து முடிந்த தேர்தலில் தனி அணியாக களம் கண்டு, ஒரு கோடி 62 லட்சம் மக்களின் ஆதரவுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனிப் பெரும்பான்மை என்பது நூலிழையில் தான் தள்ளிப் போயிருக்கிறது” என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எதிர்கொண்ட விஜய், “எங்களைச் சிறுபான்மை அரசு என்று நீங்கள் சொன்னால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆம், இது சிறுபான்மை அரசுதான். ஆனால், இது சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசு” என்று புதிய விளக்கம் அளித்தார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ‘சிறுபான்மை அரசு’ என்ற விமர்சனத்தை, மக்களுக்கான சேவையாக மாற்றிப் பேசி அவையில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இறுதியாக, 1967 மற்றும் 1977 தேர்தல்களைப் போல, 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக ஒரு சாமானியர்களின் அரசு தமிழகத்தில் அமைந்திருப்பதாக விஜய் உறுதிபடக் கூறினார். “விசில் அலை வெற்றியலையாக மாறியுள்ளது, ஒரு விரல் புரட்சி இப்போது விசில் புரட்சியாக உருவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்ட அவர், தன் மீதான நம்பிக்கைக்குப் பாத்திரமாக மக்களாட்சியைத் தொடர்வேன் என்று கூறி உரையை நிறைவு செய்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

5 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago