“மே 8-ஆம் தேதி நள்ளிரவு ஹோட்டலில் நடந்தது என்ன?”…. சட்டமன்றத்தில் குண்டை தூக்கி வீசிய அமைச்சர் ஷாஜகான்…. அடுத்த பரபரப்பு….!

Spread the love

வாணியம்பாடி தொகுதி ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் சையத் பாருக் பாஷா மற்றும் அமைச்சர் ஷாஜகான் ஆகியோரின் கருத்துகளால் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளன. திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் தாம் பேசிய கருத்துகளை திமுகவினர் திரித்து பேசி வருவதாக குற்றம்சாட்டிய சையத் பாருக் பாஷா, ஐயுஎம்எல் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடி கோடியாகப் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறி திமுகவினர் மிரட்டியதாகத் தாம் கூறியதை தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்றார். தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பரப்புரை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மே 7-ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்ததாகவும், அதைத் தங்களது கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்ததால், அவர் பேட்டியில் அளித்த தகவலையே தாம் கட்சி கூட்டத்தில் பகிர்ந்துகொண்டதாகவும் தெளிவுபடுத்தினார்.

சையத் பாருக் பாஷாவின் இந்தப் பேச்சுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவையில் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஷாஜகான், தற்போதைய அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சிப்பதையும், முஸ்லீம் லீக் பணம் வாங்கியது மற்றும் குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டுகளையும் எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், வாணியம்பாடி எம்.எல்.ஏ சையது பாருக் பாஷா அதிமுகவினரைப் பற்றி தவறாகப் பேசவில்லை என்றும், மே 7-ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியைத் தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்ற முடிவை திமுகதான் எடுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நகர்வுகள் குறித்து மேலும் பேசிய அமைச்சர் ஷாஜகான், மே 8-ஆம் தேதி திமுக திடீரென வேறொரு முடிவை எடுத்து அறிவித்ததாகக் கூறினார். திமுகவின் இந்த மாறுபட்ட முடிவை ஐயுஎம்எல் ஏற்க மறுத்த காரணத்தினால், மே 8-ஆம் தேதி இரவு தங்களது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டியது யார் என்றும், அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆட்களைப் போட்டது யார் என்றும் உண்மையைப் பகிரங்கமாக உடைத்துப் பேச வேண்டிவரும் என எச்சரித்தார். இறுதியில், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே தாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக அவர் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago