சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய இணைப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தனர். முதல்வர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்காத நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், வளர்மதி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளும் இவர்களுடன் தவெகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் முடிந்த பிறகு திரைக்குப் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டம் அரங்கேறியதாகக் குற்றம் சாட்டினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 26 நாட்கள் சிறையில் அடைத்தவர்களுடன் கூட்டணி அமைக்கச் சதிகாரர்கள் சிலர் துடித்துக் கொண்டிருப்பதாக அவர் சாடினார். அந்தச் சதியை முறியடிக்கும் பெரும் சக்தியாகவே விஜயபாஸ்கர்கள் தற்போது தவெகவிற்கு வந்துள்ளார்கள் என்றும், உண்மையான துரோகம் இங்கு இல்லை, அங்கேயே (அதிமுகவில்) தான் இருக்கிறது என்றும் அதனை அடையாளம் காட்டியவர்கள்தான் இவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு தூய்மையான தலைமையை ஏற்றுக்கொண்டு இவர்கள் தவெகவிற்கு வந்துள்ளதாகப் பாராட்டினார். “நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது விஜய்யுடன் பயணித்து வருகிறேன். இந்த இணைப்பு விழா ஒரு மாநாடு போல காட்சியளிக்கிறது. புஸ்ஸி ஆனந்த் தற்போது எப்போதும் பிஸியான மனிதராக வலம் வருகிறார்; இளைஞர்களைக் கவரும் ஆற்றல் மிக்கவராக ஆதவ் அர்ஜுனா திகழ்கிறார்” என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அவர் வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், தவெகவிற்கு வருபவர்களை துரோகிகள் என்று சொல்வதற்கில்லை என்றார். மேலும், “50, 60 வயதுடையவர்களை வைத்துக்கொண்டு அங்கே மகளிர் அணி கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால், இங்கு பாம்பையும் மிதிக்கும் துடிப்புள்ள இளைய பட்டாளமே திரண்டு நிற்கிறது. எதிர்க்கட்சியாகவே ஜாலியாக இருந்தவர்களின் பதவியையும் மக்கள் பிடுங்கிவிட்டார்கள். தற்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது அரசியல் கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி” என்று தனது உரையில் மிகக் காரசாரமாகப் பேசி முடித்தார்.
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…