2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததால், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். தவெக ஆட்சியமைந்தது முதல், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தஞ்சாவூர் வரை அழைத்துச் செல்லப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளான விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் அவை மரபுகள் குறித்துத் தவெக மற்றும் திமுக இடையே புதிய சர்ச்சை உருவெடுத்துள்ளது. வழக்கமாக முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், முதலமைச்சர் விஜய் அவைக்கு வரும்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்பதில்லை என்றும், முதலமைச்சரின் வணக்கத்திற்குப் பதிலளிப்பதில்லை என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவை கண்ணியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் குறித்து உரையாற்றினார். அப்போது பதிலளித்துப் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “நாங்கள் முதல்முறையாகச் சட்டமன்றத்திற்கு வந்திருப்பதால் மூத்த தலைவர்களின் அறிவுரைகளைக் கேட்டு கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்; ஆனால் அதே கண்ணியத்தையும் அவை மரபையும் 8 கோடி மக்களின் முதலமைச்சர் உள்ளே வரும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சொல்லிக் கொடுங்கள்” எனக் காரசாரமாகக் குறிப்பிட்டார். இதனால் திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…
உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…