“20 வருட பாசம்… செயற்கையா அழல”….. ட்ரோல்களுக்கு அமைச்சர் பர்வேஸ் அதிரடி விளக்கம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை…!

Spread the love

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாணவர்களின் போராட்டத்தைக் திசைதிருப்பி நீர்த்துப்போகச் செய்யும் வகையில், இந்த திரைப்படக் கொண்டாட்டங்கள் அமைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

இதனிடையே, திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர்கள் சிலர் திரையரங்கத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து அழுத காட்சி இணையத்தில் வெளியாகிப் பரவலான விமர்சனத்திற்கு உள்ளானது. மக்கள் பிரச்சினைகள் தீவிரமாக இருக்கும் சூழலில் அமைச்சரின் இந்தச் செயல் தேவையற்றது எனக் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வந்தன.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பர்வேஸ் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், “நான் 2006-ஆம் ஆண்டு முதல், எனது 11 வயதிலிருந்தே தலைவரின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பயணித்துள்ளேன். இறைவனுக்குத் தெரியும், நாங்கள் ரசிகர் மன்றமாகத் தொடங்கி, மக்கள் இயக்கமாக மாறி, இன்று அரசியல் கட்சியாகப் பரிணமித்துள்ளோம். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது பெயரையும் முகத்தையும் வைத்தே கவுன்சிலரானேன்; பின்னர் எம்.எல்.ஏ ஆகி, தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், “என்னுடைய எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிகள் அனைத்தும் எனது தலைவரால் கிடைத்ததுதான். அப்படிப்பட்ட தலைவரின் கடைசிப் படத்தை திரையரங்கில் பார்க்கும்போது மனவேதனை அடைந்து இயல்பாகவே கண்ணீர் வந்துவிட்டது. இதில் எந்தச் செயற்கைத்தனமும் இல்லை, அது உண்மையான உணர்ச்சி. நான் உண்மையிலேயே அழுதேனா இல்லையா என்பது இறைவனுக்குத் தெரியும். எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்; அவர்களைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எப்போதும் போல மக்கள் பணியைத் தொடர்வோம்” எனக் கூறினார். அமைச்சரின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… மைதானத்தில் பாய்ந்த கல்… ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நடுவர்… ஈக்வடாரில் பதறவைக்கும் விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…

11 minutes ago

கம்பியில் சிக்கிய தலை… 12-வது மாடி சுவரில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி… பதறி அடித்து ஓடிவந்த பொதுமக்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜிங் நகரில், 3 வயது சிறுமி ஒருவர் 12-வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்…

14 minutes ago

தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு யார் காரணம்? … தமிழக அரசியலில் அடுத்த ‘பிக்புட்’ வைக்கும் உச்சநட்சத்திரம்… கசிந்த அந்த ரகசிய தகவல்….!

திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக விளங்கும் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியுடன் முதல்வர்…

23 minutes ago

ஐயோ என்ன கொடுமை இது?… போதையில் கழன்ற காக்கி மானம்… பேருந்து நிலையத்தில் கிடந்த துப்பாக்கி… அதிரடி நடவடிக்கை…!

துர்கா மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் அம்பிகாபூர் பேருந்து…

24 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! ஆப்பில் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஓட்டுனர் செய்த காரியம்… மிரண்டு போன பயணி…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் நள்ளிரவில் ராபிடோ பைக் மூலம் பயணம் செய்த பயணியைக் கத்தியைக் காட்டி மிரட்டிச் செல்பேசியைப் பறித்துச்…

27 minutes ago