ரூ.1020 கோடி ஊழல்… நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன்… அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி…!

Spread the love

நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று மக்கள் முன்பாக வருகிறார்கள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இதை தொடர்பாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய கே என் நேரு, திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. குடும்பப் பெண்கள் வளர்ச்சிக்காக மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 53,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளோம். இதே போல வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் கூடுதல் வாக்குகளை பெற வேண்டும்.

மேலும் நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என நாட்டு மக்கள் முன்பாக கூறிக்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களாகிய நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஆட்சி நாட்டு மக்களாகிய உங்களுக்கு செய்துள்ள நல்ல பல திட்டங்களை எண்ணிப் பார்த்து வருகின்ற தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும். அரசுடைய சாதனைகளை நல்ல பல திட்டங்களை பூத் கமிட்டி நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்க பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே என் நேரு பேசியுள்ளார்.

மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய அமைச்சர் நேருவை குறி வைத்து அடித்தால் திருச்சி பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் என கூறியுள்ளார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன் என்றும் கே என் நேரு விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் 1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

33 seconds ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

10 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

11 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

15 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

17 minutes ago