“டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டவன் நான்… நானும் என் தாயும் பட்ட வேதனைகள் அதிகம்….” சட்டப்பேரவையில் அமைச்சர் கே.விக்னேஷ் உருக்கமான பேச்சு…!!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் கே.விக்னேஷ், தனது சொந்த வாழ்க்கைப் பின்னணியைப் பகிர்ந்து ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்தார். “சிறுவயதில் மதுவின் பாதிப்பினால் நானும் என் தாயும் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். ஒரு வாய்ப்பு கிடைத்தால் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என சிறுவயதில் நினைத்ததுண்டு. ஆனால், இன்று அதே துறையை வழிநடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்திருப்பது காலத்தின் சூழலா அல்லது கடவுளின் கட்டளையா எனத் தெரியவில்லை” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியதுடன் நிறுத்தாமல், டாஸ்மாக் பணியாளர்களுக்கான முக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அமைச்சர் அறிவித்தார். டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 வரையிலும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 வரையிலும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 வரையிலும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் வாராந்திர விடுமுறை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தற்காலிக சஸ்பெண்ட் மற்றும் பணிநீக்கம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

3 minutes ago

அட கடவுளே… போன் கொடுத்து உதவியது குத்தமா?… 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய தொழிலாளி… உயிருடன் திரும்பி வந்து காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்…!

கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…

9 minutes ago

அடகொடுமையை..! காட்டுக்குள் 12 வயது சிறுமி கடத்தல்… கொடூரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தப்பிக்க முயன்ற போது நடந்தது என்ன?… பரபரப்பு பின்னணி…!!

காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

10 minutes ago

லேட்டஸ்ட் வார்னிங்!… இன்னும் 3 வருஷம் தான் டைம்!… ரோபோக்கள் கையில் உலகமா?… மனிதர்களை மிஞ்சும் இயந்திரங்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…

19 minutes ago