தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்ததால், அனைத்து துறைகளிலும் ஊழல் புற்றுநோய் போல படர்ந்துள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது தங்களது ஆட்சியில் தலைமை சரியாக உள்ளதால் அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் ஊழல் படிப்படியாகக் குறையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அப்பகுதியில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று குறித்துப் பேசிய அமைச்சர், இது சுகாதாரமற்ற உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது என்றார். அனைத்து உணவு விடுதிகளிலும் தூய்மையான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், பெருந்தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 97 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். அதே வேளையில், மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் உயர் சிறப்பு மருத்துவர்களின் தேவை இருப்பதால், முதலமைச்சருடன் ஆலோசித்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்தும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…