செங்கோட்டையன் காலம் அது…! நீங்க கொஞ்சம் அப்டேட் ஆகுங்க… விஜய்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

Spread the love

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் விகிதம் அதிகரித்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்வைத்த விமர்சனத்திற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2017-18 அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோதுதான் இந்த இடைநிற்றல் 16 சதவீதமாக அதிகமாக இருந்தது என்றும், தற்போதைய திமுக ஆட்சியில் அது 7.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

விஜய் பழைய தரவுகளை வைத்துக் கொண்டு பேசுவதாகவும், அவர் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்துகொண்டு தன்னை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மகளிர் உரிமைத் தொகை மற்றும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் போன்ற திட்டங்களால் தமிழக அரசு பெண்கள் மற்றும் சாமானிய மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் சாதனைகளை மத்திய அரசே புள்ளி விவரங்களுடன் அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசைப் பழைய செய்திகளை வைத்து விமர்சிப்பது முறையல்ல எனத் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரித்து, தகுதியானவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அரசியல் விமர்சனங்கள் உண்மையான தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அமைச்சரின் முக்கியக் கருத்தாக இருந்தது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

8 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

31 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago