ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தமும் முறிவுக்கு வந்தது. கடந்த 13 நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்து வரும் ஈரான், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்து, உரிய அனுமதி பெற்ற கப்பல்கள் மட்டுமே குறிப்பிட்ட பாதுகாப்பான வழித்தடத்தில் செல்ல முடியும் என அறிவித்தது.
இந்நிலையில், ஈரான் நிர்ணயித்த பாதுகாப்பான வழித்தடத்தைத் தாண்டிச் சென்ற ஓர் எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்படை கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதித்த பாதையை விட்டு விலகிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை ஈரான் ஆயுதப் படைகளுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ள போதிலும், ஈரான் அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் உக்ரைன், பிரிட்டன் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தன் மீது தாக்குதல் நடத்தப் பயன்படும் எந்தவொரு இடமும், நிலமும் தங்கள் ராணுவத்திற்குச் சட்டப்பூர்வமான இலக்காகவே கருதப்படும் என்றும் ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…