தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்பட்டவர் தான் இயக்குனர் ஸ்ரீதர். வெண்ணிற ஆடை மற்றும் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் எம்ஜிஆர் நடிப்பில் இயக்கிய திரைப்படம் தான் உரிமைக்குரல். கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர், லதா, நம்பியார் மற்றும் நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் வாலி கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதி இருந்தனர். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியான தேசரா புல்லோடு என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் உரிமைக்குரல் திரைப்படம்.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் மற்றும் ஸ்ரீதர் கூட்டணியில் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்ற நிலையில் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு எம்ஜிஆர் திரைப்படத்தை இயக்காத ஸ்ரீதர் சிவாஜி படத்தை இயக்கிய போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவில் தான் எம்ஜிஆர் இடம் உரிமைக் குரல் திரைப்படத்திற்காக கால் சூட் கேட்க அவரும் பழையதை மறந்து கால் சூட் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு உருவான திரைப்படம் தான் உரிமைக்குரல். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் மூலம் ஸ்ரீதர் தன்னுடைய கடன்களை அடைத்துள்ளார். அதே சமயம் இந்த திரைப்படத்தின் கதையை ஸ்ரீதர் முதலில் சிவாஜியிடம் தான் கூறியுள்ளார். கதையைக் கேட்ட சிவாஜி, இந்த கதை எனக்கு செட் ஆகாது. அண்ணனுக்கு தான் செட் ஆகும், நீங்கள் அவரை வைத்து எடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகே இயக்குனர் ஸ்ரீதர், எம்ஜிஆரிடம் கால்ஷூட் கேட்க முடிவு செய்துள்ளார் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…
1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…