#image_title
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.
எம் ஜி ஆர் படங்களுக்கு மக்களைக் கவரும் வெகுஜன பாடல்களை இசையமைக்கும் எம் எஸ் வி சிவாஜி படங்கள் என்றால் தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் என்று குஷியாகிவிடுவார். அதனால் அவர் சிவாஜிக்கு இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.
ஆனால் ஆரம்பத்தில் அவருக்கான வாய்ப்புகள் மிக எளிதாகக் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் எஸ் எம் சுப்பையா நாயுடுவுக்கு உதவியாளராக பணியாற்றிய எம் எஸ் வி, தானே பல பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார். அந்த பாடல்கள் எல்லாம் ஹிட்டானதால் பல தயாரிப்பாளர்களிடம் சுப்பையா நாயுடு அவரை அறிமுகப்படுத்தி பட வாய்ப்புகள் கொடுக்க சொல்லியுள்ளார்.
அப்படிதான் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா என்ற படத்தின் வாய்ப்பு எம் எஸ் விக்குக் கிடைத்துள்ளது. இரவு பகலாகக் கண் விழித்து ‘ஜொனோவா’வுக்கு இசை அமைத்தார், விஸ்வநாதன். 4 பாடல்களுக்கு இசையமைத்து ஒலிப்பதிவுக்கு தயாரானார். பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்ட தயாரிப்பாளர் ஈப்பச்சன், டைரக்டர் எப்.நாகூர் ஆகியோருக்கு பாடல்கள் பிடித்துப் போக அவர்கள் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.
ஆனால் படத்தின் கதாநாயகனான எம் ஜி ஆருக்கு, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று தெரிந்ததும் அதிருப்தி அடைந்து விட்டாராம். ஏனென்றால் எம் ஜி ஆர் ஜுப்பீட்டரில் வேலை செய்யும் போது அங்கு உதவியாளராக பணியாற்றியவர்தான் விஸ்வநாதன்.
இதனால் தயாரிப்பாளர்களிடம் “விஸ்வநாதனா?… அவன் ஜுபிடரில் எடுபிடி வேலை செய்து கொண்டு இருந்த பையன் ஆயிற்றே. அவனுக்கு இசை பற்றி என்ன தெரியும்?.. அதனால் அவன் வேண்டாம், உடனே இசையமைப்பாளரை மாற்றுங்கள்’ என்று கோபமாகக் கூறியுள்ளார்.
ஆனால் பாடலைக் கேட்ட தயாரிப்பாளரும் இயக்குனரும் விஸ்வநாதன்தான் இசை அமைப்பாளர் என்பதில் உறுதியாகக் கூறியுள்ளனர். எம் ஜி ஆரை சமாதானப்படுத்தும் விதமாக,’விஸ்நாதன் இசையமைத்த பாடல்களை ஒருமுறை கேட்டு பார்த்துவிட்டு, உங்கள் அபிப்பிராயத்தை கூறுங்கள்’ என்று கூறியுள்ளனர்.
அதையேற்ற எம் ஜி ஆர் பாடல்களைக் கேட்டார். அப்போதே அவருடைய எண்ணம் அடியோடு மாறியது. விஸ்வநாதன் வீட்டுக்கு நேராக சென்று, அவரைப் பாராட்டினார். அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு எம் ஜி ஆரின் கடைசிப் படம் வரை தொடர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…