மக்கள் திலகமான எம்ஜிஆர் , மஞ்சுளா நடிப்பில் வெற்றி நடை போற்ற திரைப்படம் தான் ‘இதய வீணை’ இப்படத்தின் இசை அமைத்த கதையைப் பற்றி இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஒருநேர் நிகழ்ச்சியில் பகிர்ந்து உள்ளார். 1950, 60களில் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வளம் வந்தவர் தான் எம். ஜி.ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர் இவர் பல வருடங்களாக நாடகங்களில் நடித்துவிட்டு தான் சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் நுழைந்த புதிதில் சின்ன சின்ன வேடங்களில் தான் நடித்து வந்தார். 10வருடங்களுக்குப் பின்னர் தான் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
பஞ்சு – கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம்தான் , இதய வீணை. இது 1972 ஆம் வருடம் வெளியானது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், மஞ்சுளா, சிவக்குமார் லட்சுமி , நம்பியார் என பலர் நடித்துள்ளனர். படத்தில் வரும் சில காட்சிக்காக காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தது. அப்படத்தில் வரும் ‘பொன் அந்திய மாலை பொழுது’ பாடலுக்காக 3 மாதம் உழைத்திருக்கிறோம். ஒரு நாள் பாட்டின் ட்யூனை பாடி காட்டுவதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றோம். எப்படியும் ஓகே சொல்லிவிடுவார் என்று மகிழ்ச்சியாக சென்று இருந்தோம். ஆனால் அவர் ட்யூனை மாற்றி மாற்றி போடச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
கடைசியாக நாங்கள் வாசித்த மூன்று டியூன்களை ஒன்றாக சேர்த்து பாடச் சொன்னார். மூன்றையும் சேர்த்து பாடிக் காட்டினோம் அந்த ட்யூனை ஓகே செய்துவிட்டு பாடலை ரெக்கார்ட் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோமே பாடல் என்னவாக போகின்றதோ என்ற பயத்தில் தான் இருந்தோம். ஆனால் , “பொன் அந்தி மாலை பொழுது” பாடல் சூப்பர் ஹிட் பாடல் ஆக மாறியது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் , லட்சுமி மற்றும் சிவக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை ஆனந்த விகடன் இதழில் வெளியான மணியன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி சென்னையில் மட்டுமின்றி மற்ற ஊர்களிலும் வசூலை குவித்தது. குறிப்பாக மதுரை தேவி திரையரங்கங்களில் தொடர்ந்து 100 அரங்க நிறைந்த காட்சிகளாக ஓடியது. மேலும் திருச்சி பேலஸ் தியேட்டர் மற்றும் கோவையில் இரண்டு தியேட்டர்களிலும் பல நாட்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர் இறந்த போயினும் அனைவர் மனதிலுமே இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…