Categories: சினிமா

என்னோட ரசிகர்கள் பணக்காரங்க இல்ல… அவங்களுக்கு பிடிச்சதை தான் செய்வேன்.. நண்பர் MSV க்கு ஷாக் கொடுத்த MGR..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அரசியலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர். குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர்.

எம்ஜிஆர் சினிமாவில் நடிக்க தொடங்கியிலிருந்து நடிகர் ஆக அவருடைய படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். MSVக்கும் MGR க்கும் இணக்கமான நட்பு உள்ளது. ஒரு நாள் வெளிநாட்டுக்கு போன எம்எஸ்வி அங்கிருந்து டேப் ரிக்கார்டு ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதை தன்னுடைய ஸ்டூடியோவில் உள்ளவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அதிலிருந்து ஒரு பாட்டு பிரேம் பண்ணும் பொழுது அங்கிருந்து எல்லோரும் இப்படி ஒரு டேப்ரிக்கார்டை பார்த்ததே கிடையாது. இவ்வளவு இனிமையாக பாட்டு கேட்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.  அவர்கள் எல்லோரும் அப்படி சொன்னதால் எம்ஜிஆரிடம் அதை காட்டலாம் என்று எம்எஸ்வி முடிவு செய்து எம்ஜிஆர் அவர்கள் ஸ்டூடியோ வந்ததும் டேப்ரிகார்டை காண்பித்து அதில் ஒரு பாட்டையும் ஓடவிட்டு காட்டியுள்ளார் எம்எஸ்வி.

எம் ஜி ஆர் பாட்டு கேட்டும் நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு தன்னுடைய உதவியாளரை கூப்பிட்டு காரில் இருந்த ஒரு டேப் ரெக்கார்டு எடுத்து வர சொல்லி அதிலிருந்து பாட்டை கேட்டுள்ளார். அந்த பாட்டு இரைச்சல் சத்தமாக இருந்தது. இதை பார்த்த எம் எஸ் வி எம்ஜிஆர் கிட்ட அண்ணே நான் வாங்கிவிட்டு வந்த டேப்ரிகார்டரில் பாட்டு கேளுங்கள் அது இதமாக கேட்கும் என்று சொல்ல, அதற்கு எம்ஜிஆர் அவர்கள் என்னுடைய ரசிகர்கள் யாருமே பணக்காரர்கள் இல்லை கூலி தொழிலாளர்கள் தான். ரிக்ஷா ஓட்டுபவர்களும் மீனவர்களும் தான்.

நான் அவர்கள் எல்லோருக்கும் நான் கேட்கும் இரைச்சல் அதிகமாக உள்ள டேப் ரெக்கார்ட் பாட்டு கேட்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நீ என்னடா என்றால் வெளிநாட்டு டேப் ரெக்கார்டரில் கேட்க சொல்கிறாய். என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கிற பாடல்களை நாட் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் எதில் கேட்பார்களோ அதில் தான் நான் கேட்க வேண்டும்.  அப்படி என்றால் தான் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை நான் கொடுக்க முடியும். நீ எப்படி இசையமைத்தாலும் நான் இதில் தான் பாட்டு கேட்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் எம்ஜிஆர். இந்த தகவலை எம்எஸ்சி அவர்கள் மயில்சாமி அவர்களிடம் சொன்னதாக மயில்சாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

2 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

2 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

2 மணத்தியாலங்கள் ago