#image_title
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற யாரும் மறந்துவிட முடியாத நடிகர் MGR.இவரைப் போல ஒரு மகா நடிகனும் இல்லை. இவரைப் போல் ரசிகர்களை கொண்டவரும் இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரை அதே பதவியில் இருந்து சிறப்பாக ஆட்சி செய்தவர் MGR.
குடும்ப வறுமையின் காரணமாக MGR அவர்களும் அவரது சகோதரர் ஆனா எம் ஜி சக்கரபாணி ஆகியோரும் இணைந்து நாடக குழுவில் சேர்ந்தனர். அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து. முதலில் துணை நடிகராக சினிமாவில் நடித்தார் MGR. அதற்குப் பிறகு நடிகராக நடிக்க தொடங்கினார். நடிகராக நடிக்க தொடங்கிய பின்பு 1950 60 70களில் புகழின் உச்சியில் இருந்தார் MGR.
MGRரின் திரைப்படங்கள் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகளைக் கொண்டு இருக்கும். MGR படங்கள் என்றாலே ஹிட் தான். இவர் நடிக்காத கதைக்களமே இல்லை என்று சொல்லலாம். சினிமா வட்டாரங்களிலும் இவருக்கு என்று தனி பெயரும் புகழும் இருந்தது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றிய MGR ஒரு கட்டத்திற்கு பிறகு தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். MGR பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் அவர் அதிகப்படியான புத்தகங்கள் படிப்பார் என்பதுதான். அவரது இல்லத்தில் கீழ்த்தளத்தில் ஒரு நூலகத்தை வைத்திருந்திருக்கிறார் MGR. புத்தகம் படித்தனால் கிடைத்த ஞானத்தை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அது என்னவென்றால் ஒரு முறை MGR தஞ்சை அரண்மனையை காண சென்றாராம். அப்போது அவர் எப்பொழுதோ தஞ்சை அரண்மனையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை படித்திருக்கிறார். அதை தேட சொல்லி இருக்கிறார் யாராலும் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் MGR தான் படித்த புத்தகத்தில் கொடுத்த வழிகாட்டுதலின்படி சரியாக அதே இடத்திற்கு சென்று சுரங்கத்தை கண்டுபிடித்தாராம். இப்படி தனது ஞானத்தினால் தஞ்சை அரண்மனையின் ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் MGR.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…