#image_title
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சத்தமாக பேசுவதாலும் தனித்துவமான பாடி லாங்குவேஜை கொண்டிருப்பதாலும் பிரபலமானவர். ஆரம்பத்தில் ஒரு நடன கலைஞராக இருந்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு வெளியான அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் இடம் பெற்று இருப்பார். அதற்குப் பிறகு சென்னை மற்றும் பெங்களூர் மாவட்டங்களின் அரசு கண்காட்சிக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திராதில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி.
தொடர்ந்து எல்கேஜி, கூர்க்கா, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நாய் சேகர், பத்து தல போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமாக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி.
ரெடின் கிங்ஸ்லி தொலைக்காட்சி நடிகையான சங்கீதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்று துபாய் போல வெளிநாட்டு மாதிரிகளை உருவாக்கி ஒரு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வில் ரெடின் கிங்ஸ்லியும் சங்கீதாவும் நேர்காணல் கொடுத்திருக்கின்றனர். அப்போதுதான் ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை நடிகர் ஆவதற்கு முன்பு என்ன செய்திருக்கிறார் என்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் நான் நகைச்சுவை நடிகர் ஆவதற்கு முன்பு இந்த மாதிரி செட்டப் பண்ற வேலைதான் காண்டிராக்ட் எடுத்து பண்ணுவேன். இப்போ இந்த துபாய் க்ளோபல் வில்லேஜ் ஒரு 20 நாளா ஆர்டிஸ்ட் கார்பன்டர் மோல்டர்ஸ் வச்சு ரெடி பண்ணோம். ஒரு 300 தொழிலாளிகள் இதுக்காக ஒர்க் பண்ணுனாங்க. இந்த மொத்த துபாய் குளோபல் வில்லேஜ் ஓட பட்ஜெட் 3.5 கோடி ரூபாய். இந்த அரசு கண்காட்சி நிறைய பொருட்காட்சிகள் நான் எடுத்து இந்த மாதிரி பண்ணி கொடுத்து இருக்கேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…