எம்.ஜி.ஆரை கிண்டலடித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்! லெஃப்ட் ரைட் வாங்கிய புரட்சித் தலைவர்! பொன்மனச் செம்மல்ன்னா சும்மாவா?

By Arun

Published on:

தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தவர். எம்.ஜி.ஆர் தனது தொடக்க காலகட்டத்தில் வறுமையில் வாடியவர். பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுப்போனது. அதன் பின் பல தடைகளை தாண்டி “ராஜகுமாரி” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின் அவரை தடுக்க எந்த சக்தியாலும் முடியவில்லை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.

   

அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர், “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” போன்ற திரைப்படங்களை இயக்கி நடித்தார். இந்த நிலையில் ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, “ரெண்டு மூணு படத்துல நடிச்சிட்டாலே ஒருவர் டைரக்டர் ஆகிவிடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டாராம்.

அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், “என்னை மனதில் வைத்துதான் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். என்னை அப்படி தவறாக எடை போடாதீர்கள். இயக்குனர் ராஜா சந்திரசேகரிடம் பல தொழில்நுணுக்கங்களை கற்றவன் நான். அதற்கு பிறகுதான் டைரக்சன் செய்யலாம் என்ற முடிவை நான் எடுத்தேன்” என்று கூறிய எம்.ஜி.ஆர்,

“டைரக்சன் என்பது எளிதான விஷயம் இல்லை. ஒரு படத்தின் கதையைப் பற்றியும் அந்த படத்தின் வசனங்களை பற்றியும் ஒரு கதாசிரியனுக்கு எவ்வளவு தெரியுமோ அதை விட அதிகமாக அந்த டைரக்டருக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று திரைப்பட இயக்கம் சம்பந்தப்பட்ட பல நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டாராம்.

author avatar