எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை சார்ந்தவர்களும் தன்னை எதிர்ப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக உதவி செய்தவர். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கரீம் என்ற பத்திரிகையாளர் எம்ஜிஆரை பற்றி மிகவும் குறை கூறி பொய் மூட்டைகளாக பத்திரிகையில் எழுதி வந்தார். ஒருமுறை கரீம் பணக்கஷ்டத்தில் இருந்தார். மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை மற்றவர்களின் அறிவுரையால் எம்ஜிஆர் வீடு தேடி இராமாபுரம் சென்றார். ஆனால் வாசலில் காவலாளி தடுக்கவே எம்ஜிஆர் அவரை உள்ளே வரச்சொன்னார். எம்ஜிஆரின் முன்னால் பேச முடியாமல் குற்ற உணர்ச்சியில் நின்ற கரீமிடம் எம்ஜிஆர் நான் பழசை மறந்துட்டேன் உங்களுக்கு உதவி செய்றேன் என்று பணத்தை கொடுத்து அனுப்பினார். உதவியாளர்கள் அவர் உங்களை பற்றி குறை கூறினாரே என்று கேட்டதற்கு என்ன செய்வது வீடு தேடி என் வாசல் தேடி வந்துவிட்டார். அவருக்கு உதவி செய்ய தானே வேண்டும் என்று கூறினார். அத்தகைய பெரிய மனசுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…