Categories: சினிமா

ரிக்ஷாகாரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் MGR செய்த சண்டை… இந்தியாவிலேயே அவரை போல் யாரும் செய்யவில்லை…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் உச்சத்திலும் புகழின் உச்சத்திலும் இருந்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி அதில் சிம்மாசனம் போட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தவர் MGR. இப்படி ஒரு மனிதர் இருக்க கூடுமா என்று நினைக்கும் அளவுக்கு வாழ்ந்து மறைந்தவர் MGR.

குடும்ப வறுமைக்காக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் தனது கடுமையான உழைப்பு மற்றும் அர்பணிப்பால் சினிமாவில் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட MGR நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை பெரிதும் ரசித்தனர்.

MGR படம் என்றாலே ஹிட்டுதான். அந்த அளவுக்கு பெயர் பெற்று புகழின் உச்சியில் இருந்தார் MGR. தன்னை பிரபலப்படுத்திய தமிழக மக்களுக்கு பணி செய்ய விரும்பிய எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருக்கும் போதே திராவிட கட்சிகளில் பணியாற்றினார்.

பின்னர் தனக்கென தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து சிறப்பான ஆட்சி நடத்தியவர் MGR. இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். நல்ல மனிதராக மட்டுமல்லாமல் வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் இருந்திருக்கிறார் எம்ஜிஆர். இவர் நடிக்கும் படங்கள் என்றாலே எம்ஜிஆரின் கருத்துக்கள் அதிகமாக இருக்கும். இயக்குனர்களும் பாடலாசிரியர்களும் இவரிடம் கேட்டுக் கொண்டு அதில் மாற்றம் இருந்தால் உடனே செய்வார்கள். இப்படி மாற்றம் ஒரு படத்தில் செய்யப்பட்டு அதுவும் மெகா ஹிட் ஆனது. அது என்னவென்று இனி காண்போம்.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் ரிக்ஷாக்காரன். இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வரும். அதில் ஒரே நேரத்தில் எம்ஜிஆரை தாக்குவார்கள். அதை வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் ரிக்ஷாவில் அமர்ந்து கொண்டே கம்பை சுழற்றி அதுவே பிரமாதமாக வந்தது. அதேபோல இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 40 பேர் எம்ஜிஆரை அடிப்பது போல் ஒரு காட்சி எடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் எப்படி தனி ஆளாக 40 பேரை அடிக்க முடியும், படத்தை பார்க்கும்போது மக்கள் அது எப்படி சாத்தியமாகும் 40 வரை அடிக்க முடியுமா என்று மக்கள் நினைக்காத அளவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தத எம்ஜிஆர் சண்டை பயிற்சியாரை கூப்பிட்டு சுருள் கத்தியை பயன்படுத்தி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்படியும் நடித்திருக்கிறார். இந்த படமும் மெகா ஹிட்டானது. அந்த நேரத்தில் இந்தியாவிலேயே சுருள்கத்தி வைத்து உபயோகப்படுத்தி நடிக்க தெரிந்த ஒரே நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“அட! இப்படி ஒரு அசத்தலான திட்டமா?… கையில் சொளையாக ரூ. 40 லட்சம்… போஸ்ட் ஆபிஸின் சூப்பர் ‘மேஜிக்’ சேமிப்பு திட்டம்”…!!!

நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவது இயல்பானது. பங்குச்சந்தை போன்ற…

8 minutes ago

“விஜய் வருவார்… ஜெயிப்பார்..!” அன்றே கணித்த ஆர்.பி.சௌத்ரி.. வைரலாகும் பழைய வீடியோ…!

விஜய்க்கு 'பூவே உனக்காக' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில்…

12 minutes ago

சினிமாவில் ₹200 கோடி… அரசியலில் ₹2 லட்சம்..! விஜய்யின் மெகா தியாகம் – பின்னணி என்ன..?

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஒரு படத்திற்கு சுமார் 275 கோடி ரூபாய் வரை ஊதியமாகப்…

13 minutes ago

“வயிறு எப்போதும் உப்பசமாக இருக்கிறதா?… நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் தான் காரணம்… இனி கவலையே வேண்டாம்… இதோ எளிய தீர்வு”…!!!

வயிறு உப்புசம் என்பது இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இரைப்பை குடலியல் நிபுணர் Dr.…

18 minutes ago

“இத்தனை நாளா இது தெரியாம போச்சே!… டாய்லெட் கறையை விரட்ட ‘அந்த’ ஒரு பொருள் போதும்!… ரசாயன வாசனை இல்லாத மேஜிக் கிளீனர்… இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்”…!!!

வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கடுமையான ரசாயனங்களுக்குப் பதிலாக, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவை ஒரு சிறந்த…

28 minutes ago

“2017 கூவத்தூர் டூ 2026 பூரணாங்குப்பம்”… விஜய்க்கு 10 சீட்.. சி.வி.சண்முகத்திற்கு டெப்யூட்டி சிஎம்?.. நள்ளிரவில் கசிந்த ரகசிய டீல்..!

தமிழக அரசியலில் 2017-ம் ஆண்டு அரங்கேறிய கூவத்தூர் அதிரடிச் சம்பவங்கள், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதுச்சேரி பூரணாங்குப்பம்…

38 minutes ago