தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த ஒரே திரைப்படம் அன்பே வா. இந்த படம் ஷூட்டிங்கில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தாலும் இந்த படம் தயாரானது ஒரு சுவாரஸ்யம் தான். பொதுவாக எம்ஜிஆர் தன் படங்கள் தொடர்பான முடிவுகளை அவரே எடுப்பது வழக்கம்.
ஆனால் எம்ஜிஆர் விருப்பத்திற்கு மாறாக பல மாற்றங்கள் இந்த படத்தில் செய்யப்பட்டுள்ளது. முதலில் எம்ஜிஆர் வைத்து படமெடுக்க விரும்பிய ஏவிஎம் அன்பே வா படத்தின் கதையை அவரிடம் கூற உடனே படத்தில் ஜெயலலிதாவை ஹீரோயினியாக போடலாம் என்று எம்ஜிஆர் கூற ஏவிஎம் சரோஜா தேவியை ஹீரோயினியாக போட்டுள்ளனர். ஹீரோயினி அப்பாவாக கேஏ தங்கவேலுவை நடிக்க வைக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்ல, ஏவிஎம் டி ஆர் ராமச்சந்திரனை நடிக்க வைத்துள்ளனர். படத்தில் சண்டை காட்சி இல்லாததால் அசோகனுடன் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சண்டைக் காட்சி வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்ல, இந்த படத்திற்கு அது சரியாக வராது என இயக்குனர் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய படங்கள் ஸ்டூடியோக்குள்ளேயே படமாக்கப்பட வேண்டும் என எம்ஜிஆர் விரும்பும் நிலையில் அன்பே வா படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூரில் நடைபெற்று உள்ளது. இப்படி எம்ஜிஆரின் விருப்பம் இல்லாமல் பல மாற்றங்களுடன் வெளியான அன்பே வா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…