புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் சேர்ந்து நடித்து 5 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

By Deepika on மார்ச் 29, 2024

Spread the love

இன்று அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, கமல் கவுதமி போல் அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா. இவர்கள் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட், இவர்கள் நடித்த படங்களை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். இருவரின் ஜோடியும் தேவலோக ஜோடி என அந்த காலத்து மக்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட இவர்கள் இதுவரை 28 படங்கள் சேர்ந்து நடித்துள்ளனர், அதில் இவர்கள் சேர்ந்து நடித்த 5 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆயிரத்தில் ஒருவன்

   

Aayirathil oruvan

   

1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்து படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல். அதிலும் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், என்ற அந்த பாடல் தான் ஹைலைட். 2014-ல் கூட இந்தப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வெளியாகி 190 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

 

அரச கட்டளை

Arasa kattalai

1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்த படம் அரசகட்டளை. இதில் ஜெயலலிதாவின் நடிப்பு அவ்வளவு அற்புதமாய் இருக்கும். இதில் சரோஜா தேவியும் ஜெயலலிதாவும் ஒப்பந்தமாகி நடித்தனர்.

குடியிருந்த கோவில்

Kudiyiruntha kovil

பலபேருக்கு இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் உருவான படம் குடியிருந்த கோவில். இருவேடங்களில் ஒருவன் கிரிமினலாக நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்திற்காக எம்.ஜி.ஆர் தமிழ்நாடு மாநில விருதை பெற்றார்.

நம் நாடு

Nam naadu

1969 ஆம் ஆண்டு வெளியான நம் நாடு எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் முக்கியமான படம். இந்த படம் 100 நாட்கள் ஓடியது அதுமட்டுமல்ல எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வியத்திட்டது இந்தப்படம் தான். அதில் ஒரு பாடம் இன்றும் மிக பிரபலம். நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்ற அந்த பாடலை தெரியாதவர்களை யாரும் இருக்க முடியாது. இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அடிமை பெண்

Adimai pen

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எந்த படமும் முறியடிக்கவில்லை, தான் உருவாக்கிய அதை தானே முறியடித்தார் எம்.ஜி.ஆர். அது அடிமைப்பெண் படம் மூலம் நிகழ்ந்தது. ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்தாலே ஹிட் தான், அடிமை பெண் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.