செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா…? அப்போ இந்த வழிபாடு செய்யுங்க…

Spread the love

செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். அதுபோல் பலர் தொழில் செய்து கொண்டிருப்பர். ஆசை ஆசையாக பல கனவுகளோடு தொழில் தொடங்கி இருப்பர். ஒரு சிலருக்கு லாபம் கிடைத்தாலும் ஒரு சிலர் தொழிலில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் பெருக என்ன வழிபாடு செய்யலாம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.

தொழிலில் தடை வந்து கொண்டே இருக்கிறது தோல்விகள் ஏற்படுகிறது என்றால் அந்த தடைகளை விலக செய்ய எந்த பூஜை பரிகாரங்கள் செய்தாலும் அதை வெற்றி அடைய வேண்டும் என முதன் முதலாக விநாயகப் பெருமானை வணங்கி விட்டு செய்ய வேண்டும். தொழிலில் முன்னேற்றம் அடைந்து அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சில எளிய தாந்த்ரீக பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே மிகப்பெரிய பலன்களை பெற முடியும்.

வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் கௌரி பஞ்சாங்கம் குறிப்பிடப்பட்டிருக்கும். தினமும் காலை மாலை என இரு வேளையிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் கௌரி நல்ல நேரம் என்று ஒன்று வரும். இதில் தினசரி எந்த நேரத்தில் லாபம் என்று குறிப்பிட்டு இருக்கிறதோ அந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று புதிய அலில் நெய் விட்டு விக்கேற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு நாள் கூட தவறாமல் செய்ய வேண்டும். இப்படி செய்தால் தொழிலில் உள்ள தடை விலகும்.

அடுத்ததாக உங்களின் ஜென்ம நட்சத்திரம் எந்த நாளில் வருகிறது என்பதை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்கை விநாயகர் சன்னதி முன் ஏற்றி வைத்து 12 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து எனது தொழில் சிறக்க வேண்டும் எனது தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் லாபம் பெறுக வேண்டும் தடைகள் விலக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு வழிபட வேண்டும்.

டுத்ததாக சனிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்துவிட்டு புதிய சிவப்பு நிற துணியை எடுத்து அதில் 5 ஏலக்காய் 5 கிராம்பு ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரம் 5 துளசி இலைகள் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜித்து வணங்கி விட்டு அதை வியாபாரம் செய்யும் இடத்தில் கொண்டு வாசலில் கட்டிவிட வேண்டும். ப்படி செய்தாலும் தொழில் தடை விலகி லாபம் உண்டாகும்.

ஏனென்றால் சிவப்பு செவ்வாய் பகவானுக்கு உரிய நிறமாகும். தொழில் வீடு மனை சொத்து ஆகியவற்றிற்கு காரணமாக அமைப்பவர் செவ்வாய் பகவான். மேலும் பச்சை கற்பூரம் ஏலக்காய் கிராம்பு ஆகியவற்றிற்கு செல்வதை ஈர்க்கும் தன்மை உண்டு. இவற்றை ஒன்றாக சேர்த்து முடிச்சு போட்டு வைக்கும்போது அது பணத்தை ஈர்த்து லாபத்தை உண்டாக்கும். இந்த எளிமையான பரிகாரங்களை செய்வதன் மூலம் உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற்றத்தை காணலாம்.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

33 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

39 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

43 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago