#image_title
பெண்களுக்கு முக்கியமாக அத்தியாவசியமாக தற்போது தேவைப்படுவதும் பயன்படுத்துவதும் அழகு சாதன பொருட்கள். என்னதான் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஒரு சில கெமிக்கல்கள் அதில் கலந்து தான் இருக்கும். இந்த நிலையை மாற்றவே முற்றிலுமாக 100% இயற்கை மூலப் பொருட்களால் வீட்டிலே தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களின் விற்பனையை தொடங்கி இன்று செலிப்ரடீஸ் மத்தியில் பிரபலமாக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு பிராண்டு தான் Deyga Organics. இதை ஆரம்பித்தவர் யார்? எப்படி ஆரம்பித்தார் என்பதை பற்றி இனி காண்போம்.
ஆர்த்தி ரகுராம் என்கிற எம் பி ஏ பட்டதாரி இளம் பெண் தற்போதைய அழகு சாதன பொருட்களை பார்த்து சற்று கவலை அடைந்தார். அதற்கு காரணம் என்னவென்றால் எல்லாவற்றிலும் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருந்தது. இது நம் தோலில் அலர்ஜியை ஏற்படுத்துவதாக அவர் உணர்ந்தார். இயற்கை மூலப்பொருட்களை வைத்தே தயாரிக்கும் ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து 2018 ஆம் ஆண்டு Deyga Organics என்பதை தொடங்கினார் ஆர்த்தி ரகுராம்.
அப்படி Deyga Organics முதலாவது தயாரித்தது பீட்ரூட்டை கொண்டு தயாரித்த பீட்ரூட் லிப் பாம். ஆரம்பித்த முதலிலேயே இது மிகப் பிரபலம் அடைந்து அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து அதை அடுத்த கட்டமாக மாற்ற இயற்கை பொருட்களை வைத்து பல அழகு சாதன பொருட்களை தயாரிக்க முடிவு செய்தார். அதற்காக ஆர்த்தி அருகில் இருக்கும் விவசாயிகளிடம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள், கற்றாழைபோன்ற பொருட்களை பெற்றுக்கொண்டு ஆர்த்தி தனது தொழிலை தொடங்கினார்.
அதற்குப் பிறகு வீட்டிலே தயாரிக்கப்படும் சோப்புகள், ஆலுவேரா ஜெல், முடி வளர எண்ணெய், கிரீம்கள், ஃபேஸ்வாஸ்கள் போன்ற ஸ்கின் கேரில் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் தற்போது தயாரித்து வருகின்றார் ஆர்த்தி ரகுராம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை அனைத்து முக்கிய பிரபலங்களுக்கும் விருப்பமான தேர்வாக Deyga Organics இருந்து வருகிறது. இது அனைவரும் வாங்கும் விலையிலேயே கிடைக்கிறது. முயற்சியால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆர்த்தி Deyga Organics ஆரம்பித்து தற்போது ஆண்டுக்கு 20 கோடி வருவாய் ஈட்டி வருகிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…