தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை NDA கூட்டணியில் இணைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவருக்கு 50 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் (DCM) பதவி வழங்கவும் கூட்டணித் தலைமை தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய கூட்டங்களில் விஜய் பாஜாகவை விமர்சிக்காமல் தவிர்த்தது, இந்த பேச்சுவார்த்தையின் வெளிப்பாடே என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ (CBI) அனுப்பிய சம்மனுக்கு விஜய் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாளை ஆஜராக முடியாது என்றும், அதற்குப் பதிலாக 10 நாட்கள் கழித்து சிபிஐ குறிப்பிடும் தேதியில் ஆஜராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான திட்டமும் அவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் விஜய்யைச் சேர்க்க முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நகர்வுகள், வரும் தேர்தலுக்கான கூட்டணி சமன்பாடுகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்காக அவரது தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…