இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது நிலைவைப்பு நிதி வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. இதில் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யும் வசதி உள்ளது. குறிப்பாக, 400 நாட்கள் கொண்ட சிறப்பு டெபாசிட் திட்டத்தில் 6.30% முதல் 7.05% வரை வட்டி லாபம் வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதியவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், உங்கள் வயதிற்கேற்ப கூடுதல் முதிர்வுத் தொகை கிடைக்கும். 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 6 சதவீத வட்டியுடன் ரூ. 1.12 லட்சமும், 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு 6.50 சதவீத வட்டியுடன் ரூ. 1.13 லட்சமும் திரும்பக் கிடைக்கும்.
80 வயதைக் கடந்த ‘சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு’ அதிகபட்சமாக 6.75 சதவீத வட்டி வழங்கப்படுவதால், அவர்களுக்கு ரூ. 14,325 வரை நிகர லாபம் கிடைக்கும். அரசு வங்கி என்பதால் முதலீட்டுக்கு முழு பாதுகாப்பு உண்டு என்பதோடு, அவசரத் தேவைக்கு ஏற்ப டெபாசிட் காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…