கணவர் இறந்த சோகத்திலிந்து மீண்டு வரும் மீனா மாடர்ன் உடையில் எடுத்த அழகான வீடியோ ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரசிகர்களால் கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மீனா ‘அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பின்னாளில் அவருடனே ஜோடியாக நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் மரணம் அடைந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மீனா தனது சினிமா தோழிகளான குஷ்பூ, சங்கீதா, கலா மாஸ்டர் உள்ளிட்டவர்களுடன் அடிக்கடி வெளியில் சென்று வருகிறார். தற்பொழுது ஃபோட்டோ ஷூட் பக்கம் திரும்பி உள்ளார் நடிகை மீனா. சமீபத்தில் அவர் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…