Categories: சினிமா

கணவர் இல்லாமல் முதல் பிறந்தநாள் கொண்டாடும் மீனா !! சோகத்தில் இருந்து மீண்டு வர தோழிகள் செய்த செயல் .. வைரலாகும் வீடியோ .,

Spread the love

நடிகை மீனா  தனது கணவர் இறப்புக்கு பின்னர் வரும் முதல் பிறந்தநாள் ஆக கொண்டாடியுள்ளார். தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராஜ்கிரன் நடிப்பில் வெளியான ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மீனா.  அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என  அப்போதைய டாப் 10 நடிகர்களுடன் வலம் வந்தார்.

அடக்கம் ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மாடல் லுக்காக  இருந்தாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார் நடிகை மீனா. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி ஆக வலம் வந்த இவர், 2009 இல் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். குழந்தை பிறந்த பிறகு கொஞ்சம் குண்டாகி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்து நடித்தார். இவரை போலவே இவரது மகளும் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரது கணவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சமீபத்தில் இறந்தார். இந்த சோகத்தில் இருந்து அவரை மீட்டுக் கொண்டு வர அவரது தோழிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

தனது கணவர் இன்றி 46வது பிறந்தநாள் இன்று கொண்டாடும் மீனாவை சோகத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக வேண்டி சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி மீனாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த மீனாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். ஹாப்பி பர்த்டே மீனா……

Begam

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

53 minutes ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

1 மணத்தியாலம் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

1 மணத்தியாலம் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

1 மணத்தியாலம் ago