ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இருவது வயது வாலிபர் ஒருவர் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் விருந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை ஹோட்டல் அறைக்கு வாலிபர் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குளிர்பானத்தில் போதை பொருளை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்ற இருவரும் இந்த கொடூரத்தை செல்போனில் பதிவு செய்துள்ளனர். பிறகு அவர்களும் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி கடந்த மாதம் முழுவதும் பலமுறை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
ஒரு மாதமாக நரகத்தை அனுபவித்த அந்த இளம் பெண் இறுதியாக தைரியத்தை வரவழைத்து தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இளம் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இளைஞர்கள் மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். தற்போது தலைமுறைமாக உள்ள அவர்களை கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி அமோக…
தேர்தல் களத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக போன்ற ஒரு பேரியக்கம், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே…
கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…