தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களின் தொடர்ச்சியாக, தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து மதிமுக. வெளியேறப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்த போது, தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கேற்றன. ஆனால், ம.தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், சட்டப்பூர்வ சிக்கல்கள் காரணமாக அவர்களால் த.வெ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாத சூழல் நிலவியது. இந்த முட்டுக்கட்டையை உடைத்து, த.வெ.க. அரசுக்கு ஆதரவளிக்கும் முனைப்பில் ம.தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வைகோ தலைமையில் இன்று நடைபெற்ற அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளின் கருத்துகள் விரிவாகக் கேட்கப்பட்டன. அப்போது, தி.மு.க. கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் விதமாக, ம.தி.மு.க.வின் இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பதவியை ராஜினாமா செய்யும்படி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று உயர்நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவுகள், நாளை (ஜூன் 27) நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன. நாளை பிற்பகல் 3.30 மணியளவில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் அதிகாரப்பூர்வ முடிவை வைகோ அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…