#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி ஏழை மக்களுக்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதுவரை தன் சொந்த காசில் பல ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த போது ஓடோடி சென்று உதவினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை தனது சொந்த காசில் வழங்கி இருந்தார். இப்படி ஏழை எளிய மக்களுக்கு ஓடி ஓடி தனது சொந்த காசை கொண்டு உதவி செய்து வரும் இவரை மக்களும், திரைபிரபலங்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவி புகழ் பாலா தற்பொழுது, MCA படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளி ஒருவர் பைக் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பதை அறிந்த பாலா , மாற்றுத்திறனாளிகள் ஓட்டக் கூடிய 3 சக்கர பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். தற்பொழுது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…