#image_title
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். கடந்த 1994-ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நடிகர் பாண்டியராஜுடன் இணைந்து தாய்க்குலமே தாய்க்குலமே படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது மகேந்திரனுக்கு கிடைத்தது.
பின்னர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற சாதனையைப் படைத்தார் மகேந்திரன். அதன் பின்னர் ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி மகேந்திரன் நடித்த விழா ஆனந்தம், விந்தை, நாடோடி கனவு, விரைவில் ஆசை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பை தரவில்லை.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மகேந்திரன் நடித்து கவனம் பெற்றார். இப்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. முன்னதாக இவர் சூரிய வம்சம் படத்திற்காக இயக்குனர் விக்ரமன் மாஸ்டர் மகேந்திரனை புக் செய்துள்ளார். ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்கு வந்த மாஸ்டர் மகேந்திரன் அங்கு என்ன பாட்டு, நான் எங்கே நிக்கணும் அப்படினு அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்ரமன் அந்த சிறுவனை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று அசிஸ்டன் டைரக்டரிடம் சொல்லியிருக்கிறார். மாசற்ற மகேந்திரன் ஏன் என்று கேட்க பதில் சொல்லாமலேயே போய்விட்டாராம் விக்ரமன். தன்னுடைய வாயால் வாய்ப்பை இழந்திருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன். இதனையடுத்து அந்த படத்தில் சின்னத்திரை நடிகை ஹேமா அந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…