கருணாநிதி குறித்த ஆடியோ சர்ச்சை..! அந்த குரல் உங்களோடது தான்… அதை நிரூபிக்க நான் தயார்.. நீங்க ரெடியா..? ஆ.ராசாவிற்கு மாரிதாஸ் விடுத்த பகிரங்க சவால்..!!

Spread the love

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவைத் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்த மாரிதாஸிற்கு எதிராக, ஆ.ராசா தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது குரலை வெட்டி, ஒட்டித் தவறாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆ.ராசா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆ.ராசாவிற்கு நேரடி சவால் விடுத்துப் பதிவிட்டுள்ளார். எப்போதும் மற்றவர்களை விவாதத்திற்கு அழைக்கும் ஆ.ராசா, இப்போது தன்னிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரே ஒரு மேடையை போடுங்கள், மொத்த ஊடகங்கள் முன்னிலையில் அந்த ஆடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை நான் நிரூபிக்கத் தயார்” என மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவாதத்திற்கு ஆ.ராசா தனக்கு உதவியாக யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாம் என்றும், தான் தனியாக வரத் தயார் என்றும் மாரிதாஸ் அந்தப் பதிவில் கூறியுள்ளார். “அது ஒட்டவோ, வெட்டவோ படவில்லை; அது உங்கள் குரல் தான் என்பதை நிரூபிக்க நான் தயார், நீங்கள் வரத் தயாரா?” என ஆவேசமாகக் கேட்டுள்ள மாரிதாஸ், திமுகவினரை விமர்சிக்கும் வகையில் தனது பதிவை முடித்துள்ளார். இந்த சவால் தற்போது இணையதளங்களில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

6 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

6 minutes ago

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

10 minutes ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

15 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

17 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

20 minutes ago