Categories: சினிமா

“வரலாறு காணாத பேரிடர்.. அத கூட பண்ண முடில.. இத மனசுல வச்சி ஏதாவது பண்ணுங்க..” கும்பிட்டு முதல்வருக்கு மாரி செல்வராஜ் ட்வீட்..

Spread the love

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. 

#image_title

சென்னையின் நிலைமையே இப்படி இருக்கும் பொழுது தற்பொழுது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, மாநகராட்சி காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் எனபது நாம் அறிந்ததே. தற்பொழுது இவர் நெல்லை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க வேண்டும் என கூறி உருக்கமான பதிவு ஒன்றை கையெடுத்து கும்பிட்டு முதல்வருக்கு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

‘வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.  மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.’ என்று இருகரம் கூப்பி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதோ அந்த பதிவு..

Begam

Recent Posts

“அவனுடன் சேர்ந்து வாழ ஆசை…” கணவரை கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி… முடிவுக்கு வந்த 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…

4 minutes ago

துபாய் பறந்த உதயநிதி… உச்சநீதிமன்றக் கெடுவில் விஜய்… தவெக அரசின் முக்கியக் கூட்டத்தில்… பங்கேற்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?… பரபரக்கும் தலைமைச் செயலகம்…!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் காலியாக உள்ள மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக…

11 minutes ago

அதிர்ச்சி… தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்?… முதல்வர் விஜய் போடும் மெகா பிளான் என்ன?…

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த நிலையில், தற்போது மீதமுள்ள…

39 minutes ago

“அந்த போஸ்டிங் உனக்கு தான்…” 2 பிள்ளைகளின் தாய்க்கு கொடுமை… கட்டாய கருக்கலைப்பு… தவெக நிர்வாகி மீது திருமணமான பெண் பரபரப்பு புகார்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தாயான பெண்ணை…

41 minutes ago

“அத்தையே செய்த அசிங்கம்…” பெற்றோரை இழந்த 16 வயது சிறுமியை ஸ்பாவில் விற்ற கொடூரம்… மாமா உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது அனாதைச் சிறுமியை, அவரது பெற்றோர் மறைவுக்குப் பின் வளர்த்து வந்த சொந்த அத்தையும்…

48 minutes ago