தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலி கான். இவர் லியோ திரைப்படத்தில் இருதய ராஜ் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. தற்பொழுது இந்த செய்தி தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
தற்பொழுது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அய்யா பெரியோர்களே, திடீர்னு நான் த்ரிஷாவை தப்பா பேசிவிட்டேன் என்று, என் பொண்ணு, பசங்க வந்த செய்தியை அனுப்பிசாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல பிரபல கட்சியில் போட்டியிடுறேனு சொன்ன வேளையில் வேண்டுமனே எவனோ கொம்பு சீவிவிட்டு இருக்கானுங்க. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்.
உண்மையில் அந்த பெண்ணை உயர்வாத்தான் சொல்லி இருப்பேன். அனுமார் சஞ்சீவி மலையை கையில் தாங்கிக் கொண்டு போன மாதிரி, வானத்திலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. அந்த ஆதங்கத்த காமெடியா சொல்லி இருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா.
நான் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். நான் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுக்கிறவன் என்பது அனைவருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. வீடியோவை தப்பா கட் பண்ணி காமிச்சு அவங்களை கோவப்பட வெச்சிட்டாங்கன்னு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு. பொழப்ப பாருங்கப்பா’ என மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதோ அவரின் பதிவு…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…