Categories: சினிமா

“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

Spread the love

சிம்பு எனப்படும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகராகவர். 1980 களில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு. 2002 ஆம் ஆண்டு தனது தந்தை டி ராஜேந்தர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து வல்லவன் மன்மதன் கோவில் சிலம்பாட்டம் விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு. தற்போது இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன்  கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .இது தவிர ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் வருகிற 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற மன்மதன், வல்லவன்  திரைப்படம் சிறப்பு காட்சிகளாக திரைக்கு வருவதாக கமலா சினிமாஸ் அறிவித்துள்ளது. மன்மதன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்..

இந்த படத்தை எஸ்கே கிருஷ்ணகாந் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு செய்திருந்தார். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு மன்மதன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

7 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

11 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

11 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

16 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

21 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

29 minutes ago