Categories: சினிமா

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

Spread the love

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அது சம்மந்தமாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. குறிப்பாக இளையராஜா பணத்தாசையால் இப்படி நடந்து கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராயல்டி சம்மந்தமாக குழப்பமான கருத்துகள் நிலவுவதால் இதுபற்றிய தெளிவான புரிதல் பலருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் ஒரே ஒரு பாடலைப் பயன்படுத்தி ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாயை ராயல்டியாக இயக்குனர் மணிரத்னம் சம்பாதித்துள்ளார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. மணிரத்னம் தயாரித்து இயக்கிய தில்சே படத்தில் சையா சையா என்ற பாடல் இடம்பெற்றது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பைக் லீ இயக்கிய இன்சைட் மேன் என்ற படத்தின் ஆரம்பத்தில் இந்த பாடலை பயன்படுத்த அனுமதிக் கேட்டுள்ளனர். அப்போது இந்த பாடல் வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் ராயல்டியாக கொடுங்கள். அப்போதுதான் தருவோம் எனக் கறாராகக் கூறியுள்ளார் மணிரத்னம். அவர்களும் அந்த பாடலுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அதைப் பயன்படுத்திக் கொண்டார்களாம்.

மணிரத்னம் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய் கேட்க ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. அலைபாயுதே படத்தின் போது ஆரம்பக் காட்சியில் ‘என்றென்றும் புன்னகை’  பாடலுக்கு பதிலாக Backstreet Boys -ன் ஒரு  பாடலை ஒலிக்க விடலாம் என்பதுதான் படக்குழுவின் திட்டமாக இருந்ததாம். அப்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் அதற்கான உரிமையைக் கேட்ட போது அவர்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டார்களாம்.

அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்பதால் ரஹ்மானை வைத்து புதிதாக என்றென்றும் புன்னகை பாடலை உருவாக்கி பயன்படுத்தினார்களாம். சம்மந்தப்பட்ட அதே நிறுவனம்தான் சையா சையா பாடலைக் கேட்டபோது மணிரத்னம் அதே ஒரு கோடியை கேட்டு பெற்றாராம்.

vinoth

Recent Posts

“காரணம் சொல்லுங்க, இல்ல வழியப் பாருங்க”…. போராட்டத்தில் பங்கேற்காத எம்பிக்களுக்கு ராகுல் காந்தி கொடுத்த வார்னிங்…!

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு ராகுல் காந்தி…

1 minute ago

தம்பி… உன் பொண்டாட்டி கான்ட்ராக்டரோட சுத்துறாடா… கண்முன்னே நடக்கும் அநியாயம்… வாயில் பூட்டு போட்டு வேடிக்கை பார்க்கும் கணவன்…!

இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…

4 minutes ago

“விஜய் ஓடிப்போகக் காரணம் பயமா?”…. ராகுல் காந்தி வருகையால் உச்சக்கட்ட டென்ஷனில் தயாநிதி மாறன்…. பரபரக்கும் தமிழக அரசியல்…..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…

9 minutes ago

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

30 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

43 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago