“மேடையில் மாம்பழம்… மிரண்டு போன ராமதாஸ்”… பிரதமர் மோடி முன்னிலையில் அன்புமணி காட்டிய கெத்து….!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்ட மேடையில், பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே கட்சி உரிமை தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் சூழலில், பிரதமர் பங்கேற்கும் மேடையிலேயே அன்புமணி ராமதாஸின் படத்துடன் மாம்பழம் சின்னம் வைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாமகவில் தந்தை – மகன் இடையே ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பிற்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது. எனினும், ராமதாஸ் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், கட்சியின் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இத்தகைய சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், பாஜக கூட்டணியின் அதிகாரப்பூர்வ மேடையில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது, அன்புமணி தலைமையிலான அணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு ராமதாஸ் தரப்பினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருவேளை மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டால் பிரதமர் மோடி மீதே வழக்கு தொடருவோம் என்று அவர்கள் எச்சரித்து வருகின்றனர். அதே சமயம், இந்தக் கூட்டணி மேடையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெறாதது, வரும் தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்ற புதிய விவாதங்களையும் அரசியல் களத்தில் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago