டெல்லியில் முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்தும் அடைக்கலம் கொடுத்தவரின் குழந்தையை தலையைத் துண்டித்தும் கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திமிர்பூரில் உள்ள ரெஸ்டாரண்டில் நிகில் என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு காதலி ஒருவர் இருந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் காதலியின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்த பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த காதல் ஆறு வருடங்களாக நீடித்த நிலையில் நிகில் வேலை பார்த்து வந்த ரெஸ்டாரன்ட் அருகே ஒருவர் மொபைல் கடை நடத்தி வந்துள்ளார். மொபைல் கடை நடத்தி வந்தவரின் மனைவிக்கும் நெகிழியின் காதலிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவர்களும் தோழிகளாக பழகி வந்தனர்.
கடந்த வருடம் திடீரென்று நிகிலுக்கும் அவரது காதலிக்கும் தகராறு ஏற்பட்டு அடிக்கடி காதலியை தாக்கியுள்ளார். இதனால் நிகிலை உதறிவிட்டு தனது தோழி வீட்டில் காதலை தங்கியுள்ளார். நேற்று காதலியின் வீட்டுக்குச் சென்ற நிகில் அவருடன் தகராறு செய்தது மட்டுமல்லாமல் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். காதலி தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றபோது முன்னாள் காதலியின் தோழி, தனது கணவருடன் 5 வயது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார். அப்போது நெகிழி வீட்டிற்கு சென்று தனது முன்னாள் காதலி மற்றும் தோழியின் குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
சத்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக வாயிலும் டேப் ஒட்டியுள்ளார். பிறகு காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் பச்சிளம் குழந்தையின் தலையை துண்டித்து கொலை செய்தார். கொலை செய்த பிறகு கத்தியை நன்றாக கழுவி விட்டு தன்னை போலீஸ் பின் தொடரக்கூடாது என்பதற்காக செல்போனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். உடனே சம்பவம் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் உத்தரகாண்டில் நிகிலை கைது செய்துள்ளனர். முன்னாள் காதலியை பழிவாங்க பச்சிளம் குழந்தையை தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…