மனைவியின் உயிரை காப்பாற்றுவதற்காக கணவர் சர்க்கரைவள்ளி கிழங்கு விற்று நிதி திரட்டிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. சீனாவின் ஹன்டாங் மாகாணத்தை சேர்ந்த ஜியா சாங்காங்(35) என்பவருடைய மனைவி லி. இவருக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளார். தன் மனைவியின் ஆரம்ப கட்ட சிகிச்சைக்காக ஜியா ஏற்கனவே 3.5 லட்சம் யுவான் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 41 லட்சம் செலவு செய்துள்ளார்.
அடுத்த கட்டமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு மேலும் பல லட்சங்கள் தேவைப்பட்டதால் அவர் வீதியோடு அமர்ந்து சர்க்கரை வள்ளி கிழங்கு விற்க தொடங்கியுள்ளார். இதனை சமூக வலைத்தளம் மூலமாக அறிந்த பாங் என்ற நபர் ஒருவர் ஜியாவை தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள 50 டன் சர்க்கரை வள்ளி கிழங்குகளை இலவசமாக தருவதாக கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த இளைஞர் மிகவும் பொறுப்பானவர். கடினமான காலத்தில் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு சாமானிய மக்கள் பலரும் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் குழந்தை வளர்வதை பார்க்க வேண்டும், அதுதான் எங்களின் ஒரே ஆசை என்று ஜியா வருத்தம் தெரிவித்துள்ளார். மனைவியின் உயிரை காப்பாற்ற கணவன் செய்த இந்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…