ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். திருப்பதியில் வேலை செய்து வரும் இவர் திருப்பதியைச் சேர்ந்த ஈஸ்வர ரெட்டி என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். சீனிவாசராவுக்கு மகள் ஒருவர் இருக்கிறார். பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறா.ர் இந்த நிலையில் கடனை வசூலிக்க ஈஸ்வர ரெட்டி திட்டம் தீட்டி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஸ்ரீனிவாச ராவின் மகள் படித்த பள்ளிக்கு சென்று உங்களுடைய தந்தை என்னை அனுப்பி வைத்துள்ளார். உன்னை அழைத்து வர சொன்னார் என்று சொல்லி பைக்கில் அமர வைத்து இனிப்பு வாங்கிவிட்டு சொல்வோம் என்று கூறி சென்றிருக்கிறார்.
அதன் பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீனிவாச ராகவிடம் உன்னுடைய மகள் என்னிடம் இருக்கிறார். உடனே கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் மகளை கொலை செய்து விடுவேன் என்று சொன்னதும் பயந்து போன அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில், பள்ளி மாணவியை கடத்திய ஈஸ்வர ரெட்டியை கைது செய்துள்ளோம். பணப்பரிமாற்றத்தின் போது சீனிவாசராவுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொண்டார். தந்தையுடன் அடிக்கடி பார்த்ததில் மகளுக்கும் அவரை நன்றாக தெரிந்திருக்கிறது. அந்த நம்பிக்கை பயன்படுத்தி சிறுமியை கடத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணமான ஆதார் கார்டில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குறிப்பிட்ட…
சமையலறையில் பூண்டு வதக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க புதினா இலைகள் சிறந்த தீர்வாகும். பூண்டில் உள்ள சல்பர் மூலக்கூறுகளை உடைக்கும்…
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…