ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமன் குமார் என்ற வாலிபர் போலியான வருமானவரித்துறை அதிகாரி வேடமிட்டு 35 பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணிடம் மட்டும் சுமார் 9.20 லட்சம் மோசடி செய்துள்ளார். அமன் குமார் அரசு வேலைக்கு தயாரானவர்களை தொடர்பு கொண்டு வருமானவரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஐடி துறையின் மின்னஞ்சல் முகவரியை போலவே போலியாக உருவாக்கி பயிற்சி மற்றும் நேர்காணல்களுக்காக அவர்களை கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வரவழைத்துள்ளார்.
வேலை வாங்கித் தர 12 லட்சம் ரூபாய் பணம் கேட்டதில் பாதிக்கப்பட்ட டிகிரி படித்த பெண் 9.20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக போலியான நியமன கடிதங்கள் மற்றும் லெட்டர்ஹெட்களை அந்த நபர் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் வெறும் 12 ஆம் வகுப்பு படித்த அமன் குமார் 35 பேரிடம் மோசடி செய்ததும் அவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டில் சிபிஐயிலும் புகார் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…