சமீபத்தில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளேன். இந்த கட்சியில் இணைப்பவர்கள் அனைவருமே மதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான். வைகோ எந்த பிரிட்டானிய பாராளுமன்றத்தில் உரையாற்றினாரோ அதே பாராளுமன்றத்தில் இந்த ஆண்டு நான் உரையாற்றினேன். 28 ஆண்டுகள் சரியான வழியில் சென்று கொண்டிருந்த மறுமலர்ச்சி திமுக தற்போது மகன் திமுகவாக மாறிவிட்டது.
இயக்கத் தலைவர் இயக்கத் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைவராக மாறிவிட்டார். வைகோவின் மகன் துரை வைகோவிற்கு திமுக கூட்டணியில் அங்கம் வைக்க விருப்பம் கிடையாது. அவர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு ஒன்றிய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வலது சாரி சிந்தனையாளராக கார்ப்பரேட் சிந்தனையாளராக உள்ளார் என்று மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.
